பெரிய நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது.
இப்போது அஜீத்தின் “விடாமுயற்சி” மற்றும் ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் என இரண்டு படங்கள் உள்ளன.
இதில் ஞானவேல் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு எப்போதோ வெளியானாலும், இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. லைகா நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ரெய்ட்களால் அந்த நிறுவனம் பொருளாதார சிக்கல்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ரஜினி படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரஜினி லைகா, தன் பிரச்சனைகளை முடித்துவிட்டு வரட்டும் என அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.