காதல் ஜோடி சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையமருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு 8:15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். காதலன் படுகாயத்துடன் இருந்த நிலையில், ரயில்வே போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.