இன்று ஷிவேலுச் என்ற எரிமலை ரஷ்யாவில் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழும்பியுள்ளது.
ரஷியாவில் அதிபர் புதின் உத்தரவின் படி உக்ரைன் நாட்டின் மீது போர் நடந்து வருகிறது. ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை இன்று வெடித்துள்ளது. இதில், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அதிகாரிகள் 15 கி.மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெடிப்புகள் எந்நேரத்திலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்து குறியீடு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொமக்களை பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கூறியுள்ளனர். மேலும், பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.