இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு லட்சத்துக்கு 14 ஆயிரத்து 031 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 65 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது குணமடைந்தோர் விகிதம் 88.03 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.52 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 10.45 சதவீதம் குறைவாக உள்ளது.

பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,42,24,190 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.