இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது மூன்று இடங்களில் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் காரணமாக கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் பதட்டத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.