லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், வெளியான படம் “விக்ரம்.” இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலையும் குவித்தது. கமலின் சினிமா கேரியலில் முக்கியப்படமாக அமைந்தது.
ஷங்கர் இயக்கத்தில், “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து, அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்குப் பின், கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. ஏற்கனவே வினோத் இயக்கிய “சதுரங்க வேட்டை,” “தீரன்” “அதிகாரம்,” “நேர்கொண்ட பார்வை,” “வலிமை,” “துணிவு” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கமலை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் இன்று மாலை 9 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், HE KNOWS THE WAY, HE SHOWS THE WAY என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் எழுதி, இயக்கவுள்ள “கமல் 233” திரைப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 152வது திரைப்படமாகும். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.