தளபதி விஜய் நடித்த பிகில் படம் இலங்கையில் மீண்டும் வெளியாகியது!

Filed under: சினிமா |

கொரோனா வைரஸ் காரணத்தினால் உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சில நாடுகளில் மட்டும் சென்ற மாதத்தில் இருந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு சமூக வெளியை கடைப்பிடித்து படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீண்டும் வெளியாகியது. அந்த வரிசையில் தற்போது இலங்கையிலும் பிகில் படத்தை சென்ற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெளியிட்டனர்.