ராமகிருஷ்ண ஆசிரமம் பள்ளி மீது வழக்கு!

Filed under: இந்தியா |

மாணவன் பேனா திருடியதாக ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்க வைத்த பிரபலமான ராமகிருஷ்ண ஆசிரம பள்ளி.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குடும்ப வறுமை காரணமாக பல கிராமத்து சிறுவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். அருகே உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த அருண் என்ற சிறுவனும் அவனது தம்பி தருண் என்ற சிறுவனும் அங்கு தங்கி படித்து வந்துள்ளனர். தருண் அங்கு 3ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சமீபத்தில் தருண் தனது பேனாவை திருடி விட்டதாக சக மாணவன் ஒருவன் ஆசிரியரிடம் புகார் செய்துள்ளான். இதற்காக தருணை தண்டிக்க எண்ணிய பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் ஆசிரம ஆட்கள் சேர்ந்து தருணை கை, கால்களை கட்டி வைத்து பெல்ட், விறகு கட்டை ஆகியவற்றால் மோசமாக தாக்கியுள்ளனர். பின் சிறுவனை இழுத்து சென்று யாக்திர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் முன்பு பிச்சை எடுக்க வைத்துள்ளனர். தருணின் தாய் ஆசிரமத்திற்கு பார்க்க வந்தபோது தருண் கண்கள் வீங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நடந்த விஷயங்கள் குறித்து அருண் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.