ராமநாதபுரத்தில் 2 மாதத்திற்கு 144 தடை!

Filed under: தமிழகம் |

முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ல் பிறந்த சுதந்திர போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30ல் மறைந்தவர். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ல் ஆண்டுதோறும் குருபூஜை நடந்தப்படுகிறது. அதுபோல செப்டம்பர் 11, 1957-ல் முதுகுளத்தூரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரரும், சமூக போராளியுமான இமானுவேல் சேகரன் நினைவு தினமும் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரு நாட்களிலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இவ்வாண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 தொடங்கி அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.