ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் ஐபிஎல் அணிகள் – இதற்கு தானா!

Filed under: விளையாட்டு |

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கொகுரானா வைரஸ் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல உள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு ஆகஸ்ட் மாதம் செல்கிறது என தகவல் வெளியாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த தயாராக உள்ளதாகவும் மற்றும் ஐபிஎல் அணிகள் இந்த மைதானங்களில் பயிற்சியை மேற் கொள்வதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே செல்கிறது என தெரிகிறது.