ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

Filed under: இந்தியா,தமிழகம் |

ரிசர்வ் வங்கி யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதியளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுமுறை இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. யுபிஐ மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் மொபைல் மூல்ம நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தேவையில்லை. இதனால் மக்கள் இப்போ பே, பேடிஎம், பாரத் பே, கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் எளிதாக அனுப்பி வருகின்றனர். மருத்துவமனை, கல்வி நிலையங்களில் இனிமேல் யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவித்திருந்தது.