ரிலையன்ஸ் நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தம்!

Filed under: சினிமா |

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமணம் மண்டபமும் போரூரில் சங்கீதா திருமண்டபம் உள்ளன. இந்த இரு மண்டபங்களை தில்ராஜூ ஒரு ஒப்பந்தம்போட்டு, மாதம் ரூ.7 லட்சம் வாடகை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தில் ராஜுவுடனான ஒப்பந்தத்தை விஜய் ரத்து செய்துவிட்டு, ரிலையன் நிறுவனத்திற்கு இரு மண்டபங்களை கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் ‘ஷோபா திருமண மண்டபமும்’, ‘சங்கீதா திருமண மண்டமும்’ புதுப்பிக்கப்படுகிறது.