ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் வெற்றிமாறன் படம்!

Filed under: சினிமா |

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வகையில் “அசுரன்” திரைப்படத்திற்குப் பிறகு “விடுதலை” திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். மேலும் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் உருவாகும் இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெறுகிறது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை பிரபல நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.