“லியோ” படக்குழு மீண்டும் காஷ்மீர் பயணம்!

Filed under: சினிமா |

விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டூடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர். பின்னர் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ். இப்போது படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அந்த நடிகர்களை வைத்து மேலும் சில காட்சிகளை படமாக்க மீண்டும் படக்குழு காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குழுவோடு விஜய் செல்லமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது.