லெஜண்ட் இரண்டாம் பாகமா?

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு “தி லெஜன்ட்” திரைப்படம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் வெளியானது. இப் படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டு வருகிறாராம். இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம். இப்போது சூரியை வைத்து “கருடன்” என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அத்திரைப்படத்தை முடித்த பின் “லெஜண்ட் சரவணன்” படத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் சரவணன் நடித்த “லெஜண்ட்” படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.