“லெஜன்ட்” என்ற படம் கடந்த 2022ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கினார். இந்த படம் ஓரளவு சுமாரான வரவேற்பு பெற்றது. அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது.
லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பதிவில் அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தின் இயக்குனர் என்பதையும் அறிவித்துள்ளார். சமீபத்தில் சூரி நடித்த ’கருடன்’ திரைப்படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் ’புதிய விளையாட்டு ஆரம்பம்’ என்ற கேப்ஷனை லெஜன்ட் சரவணன் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.