வங்கதேசத்திலிருந்து திரும்பும் இந்தியர்களின் லிஸ்ட்!

Filed under: இந்தியா,உலகம் |

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக தெரிவித்தார். எல்லையை கடந்து வருவதாக இருந்தாலும் சரி, விமான நிலையம் சென்று விமானத்தின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி இந்தியர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் சிறப்பாக மேற்கொண்டது என்று அவர் கூறினார். ரந்திர் ஜெய்ஸ்வால் நமது நட்பு நாடான வங்கதேசத்தில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.