“விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் வசூல்களை முந்தியுள்ளது “காந்தாரா” படத்தின் தெலுங்கு வெர்ஷன்.
“கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் “ஜெய்பீம்” திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், “கேஜிஎப் 2” திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் இதுவரை 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். இது “பொன்னியின் செல்வன்” மற்றும் “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் செய்த வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.