வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

Filed under: இந்தியா,தமிழகம் |

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம் என்று பேட்டி அளித்துள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநில சட்டமன்றத்தில் இது குறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக டிஜேபி சைலேந்திரபாபு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். “ஹோலி பண்டிகை கொண்டாட வட மாநிலத்திற்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் பேட்டியளித்தபோது ஹோலி பண்டிகை கொண்டாட நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடித்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்புவோம். தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். எந்த பிரச்சினையும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பீகாரை சேர்ந்த 4 பேர்கள் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது.