வண்டலூர் பூங்காவில் 3டீ மற்றும் 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை அருகிலுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3டீ, 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.