வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை இவ்வளவா?

Filed under: இந்தியா,சென்னை |

சென்னையிலிருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் 5வது சேவை சென்னை டூ பெங்களூரு டூ மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது. அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை வந்தடையும். வினாடிக்கு 180 கி.மீ அளவிற்கு வேகமாக பயணிக்கும். ஆனால் இந்த ரயிலின் கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் கட்டண விவரங்கள் இதோ.. சென்னை டூ மைசூர் (சேர் கார்) டிக்கெட் விலை ரூ.1200, சென்னை டூ- மைசூர் (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை ரூ.2295 சென்னை டூ காட்பாடி (சேர் கார்) டிக்கெட் விலை ரூ.495, சென்னை டூ காட்பாடி (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை ரூ.950, சென்னை டூ பெங்களூரு (சேர் கார்) டிக்கெட் விலை ரூ.995, சென்னை டூ பெங்களூரு (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை ரூ.1885, பெங்களூரு டூ மைசூர் (சேர் கார்) டிக்கெட் விலை ரூ.515, பெங்களூரு டூ மைசூர் (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை ரூ.985.
இந்த பயணச்சீட்டின் விலையை கேட்கும் போதே தலையைச் சுற்றத்தான் செய்கிறது.