வரதட்சணை கேட்டதால் மணமகள் தற்கொலை!

Filed under: இந்தியா |

கேரளாவில் காதலனனின் குடும்பத்தினர் 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த சகானா என்ற மருத்துவர் தனது சக மருத்துவரான ரூவாயிஸ் காதலித்து வந்தார். இருவரது பெற்றோர்களும் திருமணம் பேச்சு வார்த்தை நடத்தினர். காதலன் பெற்றோர்கள் அதிக வரதட்சனை எதிர்பார்த்ததாக தெரிகிறது. குறிப்பாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறியதால், திருமணம் நின்றுவிட்டது. இதனையடுத்து மனமுடைந்த சஹானா திடீரென தற்கொலை செய்து கொண்டார். சஹானா பெற்றோர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் மணமகன் ரூவாயிஸ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.