வாட்ஸ் ஆப் சில ஐபோனுக்கு நிறுத்தமா?

Filed under: உலகம் |

மெட்டா நிறுவனம் சில ஐபோன் மாடல் போன்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுத்த முடிவு செய்துள்ளது.

புதுப்பிக்கப்படாத மாடல்களில் வாட்ஸ் ஆப் விரைவில் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் என்பதால் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ் ஆப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. ஆம், வாட்ஸ் ஆப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5ஜி, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6ஜி போன்ற மாடல்களில் வாட்ஸ் ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது.