வாட்ஸ் ஆப் செயலி கொண்டு பணம் அனுப்பும் புதிய முறையை பிரேசில் நாட்டில் அறிமுகம்!

Filed under: உலகம் |

பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் பணம் அனுப்பவும் மற்றும் திருப்பி பெறவும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தி வந்த வாட்ஸ் ஆப் செயலியில், புது அப்டேட் கொண்டு உள்ளூர் கடைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பொருட்களை வாங்கும் வசதியை இணைக்கப்பட்டுள்ளது. அதில் வாங்கியின் கிரெடிட், டெபிட் போன்ற கார்டுகளை கொண்டு பணம் அனுப்பலாம்.

மேலும், கட்டணம் அனுப்பும் செயல்முறையை முடிப்பதற்கு ஆறு இலக்க எண் அல்லது கைரேகை பாதுகாப்பு கொண்டு பயன்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.