வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுதும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வெப்பத்தின் தாக்கத்தை தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.