“விக்ரம் வேதா” இந்தி திரைப்பட டிரையிலர்!

Filed under: சினிமா |

“விக்ரம் வேதா” திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரையிலர் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மாதவன்-, விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்தார். மேலும் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து இன்று டிரையிலர் வெளியாகி உள்ளது. தமிழ் டிரையிலரை அப்படியே பிரதி எடுத்தது போலவே இந்தி டிரையிலர் வெளியாகி உள்ளது.