கனவு நனவானது; ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆங்கில ஆல்பம் வெளியாகியது!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார். ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருவதாகவும் மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வதேச ஆங்கில ஆல்பத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார்கள் என அறிவித்தபடி நேற்று ஆல்பம் வெளியாகி அதிக அளவில் வைரலாகி வருகிறது.

High and Dry என துவங்கும் இந்த ஆல்பத்தை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா இணைந்து கம்போஸ் செய்தும் மற்றும் பாடியும் உள்ளனர். அதற்கு “கோல்ட் நைட்ஸ்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜூலியா கர்தா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.