சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது அவருடைய பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செயல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டதோடு அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதாவின் இச்செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். கேப்டனின் டுவிட்டர் கணக்கை அப்படியே வைத்திருக்கலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனக்கென தனியாக ஒரு கணக்கை ஆரம்பித்திருக்கலாம் என்றும் கேப்டனின் டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்டு அவரது பெயரில் இருந்த கணக்கை தனது பெயருக்கு மாற்றி உள்ளது சரியல்ல என்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.