திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி “இனிமேல் யார் கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது, கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ் பாரதி, “புலியை பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள், அது நடக்காது. யார் இனிமேல் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும்” என்று பேட்டியளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்தார். சமீபத்தில் அவருடைய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் மாநாடு விரைவில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்று கூறியுள்ளது விஜய் கட்சியை தான் அவர் மறைமுகமாக கூறுவதாக கூறப்பட்டுள்ளது.