நலன் குமாரசாமி “சூதுகவ்வும்“ என்னும் டிரெண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர். இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார்.
ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின் நலன் விஜய் சேதுபதியை வைத்து “காதலும் கடந்து போகும்” திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. “சூதுகவ்வும்” மற்றும் “காதலும் கடந்து போகும்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.