விஜய் பட ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

Filed under: சினிமா |

பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவை டிரெயினர் ரொம்ப கஷ்டப்படுத்துவதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா தற்போது இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்துள்ளனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. ஆனால் தன்னைப் பற்றி வரும் கிசுகிசு பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் பாட்டுக்கு படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஜிம்மில் அவர் கடினமான உடல் பயிற்சிகளை செய்யும் வீடியோவை வெளியிட அது வைரலாகி வருகிறது.