புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கொண்டாடினார். தமிழகம் முழுதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு விஜய் அறிவிப்பார் என்று பதிலளித்தார். மேலும் விஜய் உத்தரவின் பெயரில் தான் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மரியாதை செலுத்த வந்ததாகவும் அவர் கூறினார்.