விஜய் ரசிகர்களுக்கு அபராதம்

Filed under: சினிமா,சென்னை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “லியோ.”

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், “லியோ” திரைப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை தியேட்டரில் இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்ற ரசிகர்கள் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வாகனங்களில் போலீசார் வைத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.