ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 என்ற ஜெட் விமானம் ஒன்று ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான பைலட்டுகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்கள் படகுகள் மூலம் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.