வியப்பில் ஜான்வி கபூர்!

Filed under: சினிமா |

நடிகை ஜான்வி கபூர் ராஷ்மிகா மந்தனாவுக்கு மட்டும் எப்படி பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்று வியந்து பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில், கான் நடிகர்கள் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியுள்ளது வைரலாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் “குட் லக் ஜெர்ரி.” இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது-. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜான்வி, “இந்தியில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் போன்ற நடிகர்களோடு பலரும் நடிக்க விரும்புகிறார்கள். எனக்கும் அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால் ஜோடியாக அல்ல. அவர்கள் வயதின் காரணமாக அவர்களோடு நான் ஜோடியாக நடித்தால் பார்ப்பதற்கு வித்தியாசமாய் இருக்கும். தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மொழியில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவை பார்க்கும்போது அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக இன்ஸ்டாவில் பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என ஆச்சரியப்படுகிறேன்” என்று கூறினார்.