தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கோவை மாவட்டத்தின் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்போகும் விருதை ஏற்க மறுத்துள்ளார்.
அவர் தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதமும் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு எழுதி கடிததத்தில், “மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளைக் கடந்தது போலாகிவிடும். எனவே இவ்விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என எழுதியுள்ளார்.