மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரியவருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.