தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் விசாரணை செய்யப்பட்டது. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் விவிபேட் இயந்திரங்கள் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விரும்பினால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழு பரிசோதனை செய்ய அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.