வெள்ள நிவாரணம் அளித்த நடிகர் ரஜினிகாந்த்!

Filed under: சினிமா |

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளான இன்று நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த கனமழையால், சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து வருகின்றனர். இதில், நடிகை நயன்தாரா, “நாடு” படக்குழுவினர், விஜய் டிவி பாலா, அறந்தாங்கி நிஷா, விஜய் மக்கள் இயக்கத்தினர் என பலரும் மக்களுக்கு உதவினர். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.