ஷங்கர் மகளை தாக்கி பதிவிட்ட பிரபல நடிகை!

Filed under: சினிமா |

ஹிப் ஆப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆத்மிகா. இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து வைரலாகி உள்ளது.

ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படம் அவருக்கு போதுமான அளவுக்கு கவனம் பெற்றுத் தரவில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரியளவில் அமையவில்லை. தற்போது “காட்டேரி” படத்தில் நடித்துள்ளார். அப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அப்பதிவில், “அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணியில் ஏறி மேலே சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் பாத்துக்கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவில் அவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதியைதான் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷங்கரின் மகளான அதிதி முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியானார். அதையடுத்து இரண்டாவது படமாக சிவகார்த்திகேயன் உடன் ‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை வாரிசு நடிகையான அதிதி பெறுவதைக் குறிப்பிட்டுத்தான் ஆத்மிகா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.