ஷூட்டிங்பாட்டில் புகுந்த மர்ம நபர்கள்!

Filed under: சினிமா |

தமிழில் “மாரி 2” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டோவினோ தாமஸ்.

சமீபத்தில் டோவினோ தாமஸ் நடித்த “மின்னல் முரளி” திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் “2493 FD.” இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. எதற்காக இத்தாக்குதல் நடந்தது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.