ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா நாட்டிலுள்ள ஹவாய் தீவு அருகேயுள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இத்தீ அங்குள்ள நகருக்குள் பரவியது. இதில், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தன. பலர் கடலில் குதித்து உயிர்தப்பினர். இந்த தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தினால் பலர் வீடுகள், உறவினர்களை இழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
ஹஜ் யாத்திரை நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழப்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் !
கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்!
சென்னை மருத்துவமனையில் 11 மணி நேர அறுவை சிகிச்சை: ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்...