ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க தனி HUID எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஹால்மார்க்குடன் ஆறு இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய அனுமதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 இலக்க HUID எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறிந்து கொள்ளலாம் என இதற்கான பிரத்தியேக செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க நகைகளை பதிவு செய்ய வேண்டும். இரண்டு கிராமுக்கு குறைவாக எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயம் இல்லை என்று ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.