மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

Filed under: இந்தியா |

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 11ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தை முந்தியுள்ளது.

இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு பல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில் கடந்த மூன்று வாரமாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அது 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.