பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரவாதம் அல்லது வன்முறை செய்பவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டு வருவதுபோல் தமிழ்நாட்டிலும் புல்டோசர் ஆட்சி வரும் என பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, விருதுநகர் பாஜக அலுவலகத்திற்கு போலீசார் வந்து பாரதமாதா அன்னை சிலையை திருடி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி வராது என்று நினைக்காதீர்கள் கண்டிப்பாக புல்டோசர் ஆட்சி வரும். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு திமுக பிரமுகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விருதுநகர் பாஜக அலுவலகத்தில் அனுமதி இன்றி பாரதமாதா சிலை வைத்துள்ளதாக போலீசார் அச்சிலையை அகற்றியதற்கு ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.