10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு அரசு முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் இந்நிலையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்பெண் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கருதினால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பம் செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி முதல் முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் பெறும் வாய்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.