10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பனின் மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வியடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்கால் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.