நேற்று நடைபெற்ற 10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்துள்ளது-. தற்போது 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26ம் தேதி தொடங்கிய இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். நேற்று நடைபெற்ற அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத பல வினாக்கள் வினாத்தாளில் இருந்ததாகவும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் 25 சதவீதம் கூட வினாத்தாளில் இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் கூறிய முக்கியமான கேள்விகள் ஒன்று கூட வரவில்லை என்றும் ஒரு மதிப்பெண் கேள்விகள் கூட புதிய வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் அதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதிலளிக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இம்முறை அறிவியல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் கூறிகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மற்ற பாடங்களை ஒப்பிடும்போது அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியர்களே கூறுவது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.