100 ஆண்டுகள் பழைய ரயில் நிலையத்தில் ஷூட்டிங்!

Filed under: சினிமா |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கியுள்ளாராம். இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.