100 கோடியில் உருவாகும் சிம்புவின் படம்!

Filed under: சினிமா |

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.

இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் இதுவாகும். இப்படம் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இத்திரைப்படத்துக்காக சிம்புவும் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.